
ஐதராபாத் ஜிம்மில் துல்கர் சல்மான் தீவிர பயிற்சி
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார். அதனால் தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள துல்கர் சல்மான், அங்குள்ள ஜிம் ஒன்றில் தீவிர பயிற்சி செய்து வருகிறார். அவருடன் கூடவே சகுந்தலம் படத்தில் சமந்தாவின் ஜோடியாக நடித்து வரும் தேவ் மோகன் என்பவரும் ஜிம் கூட்டாளியாக இணைந்துள்ளார். இவர் சூபியும் சுஜாதையும் படத்தில் அதிதி ராவ் காதலனாக அறிமுகமானவர்.
துல்கர் சல்மானும் தானும் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் தேவ் மோகன். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த படம், 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!