
விருமாண்டி ஸ்டைலில் விக்ரம் பர்ஸ்ட் லுக்
கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகிய மூன்று பேரையும் ஒரு போஸ்டரில் கொண்டு வந்துள்ளனர். இந்த போஸ்டரை பார்க்கும்போது கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி பட போஸ்டரை பார்ப்பது போன்று உள்ளது. ஆனால் விருமாண்டி போஸ்டரை சிறப்பாக வடிவமைத்து இருந்தனர். ஆனால் விக்ரம் போஸ்டரில் மூவரின் போட்டோக்களையும் அப்படியே ஒட்ட வைத்திருப்பது போன்று உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, ‛‛யுத்தத்தால் அதோ அதோ விடியுது... சத்தத்தால் அராஜகம் அழியுது... ரத்தத்தால் அதோ தலை உருளுது... சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது... துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்... என கமலின் விக்ரம் படத்தில் வரும் பாடலை பதிவிட்டுள்ளார்.
பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு நடிகர் கமல் தனது டுவிட்டரில், கமல் டுவிட்டரில், ‛‛வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்... விக்ரம்..."" என பதிவிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!