
மகனுக்கு முத்தம் கொடுத்ததை கொச்சைப்படுத்திய ரசிகர் : விளாசிய விஜயலட்சுமி
சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மகன் நிலனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் விஜயலட்சுமி. இதை நெட்டிசன் ஒருவர் கொச்சையாக விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார்.
இதனால் செம டென்சனாகி விட்டார் விஜயலட்சுமி, அதையடுத்து தனது டுவிட்டரில், ஓ கொழந்தகிட்ட பண்ணவேண்டிய அட்டூழியங்கள்னு ஒரு பேண்டஸி லிஸ்ட வச்சிருக்கியா. பரதேசி. இதை பாத்த உடனே பல்பு எரியுதா. நீங்கள் எல்லாம் நேர்ல வந்து பேசுங்கடா, அழுக்கு ஜென்மங்கள். இதுல அப்பாடக்கர் மாதிரி டுவீட்ஸ். இதுகூட சேந்து டிஸ்கஸ் பண்ண இன்னொரு எச்ச. அடேய் அப்ரசண்டிகளா... என்று கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார் விஜயலட்சுமி.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!