கேஜிஎப்: 2 தமிழ் உரிமையை கைப்பற்றிய ட்ரீம் வாரியர்
ஜூலை 08, 2021
Advertisement
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகி 2018ல் வெளியான கன்னட படம் கேஜிஎப் சேப்டர்1. கன்னட சினிமா சரித்திரத்திரத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய வசூலை அள்ளிய படம். இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
தற்போது கேஜிஎப்: சேப்டர்2 தயாராகி விட்டது. ஹீரோ யஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார். யஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியான படத்தின் டீஸர் 200 மில்லியன்களுக்கு மேல் பார்வைகளைப் பெற்றுள்ளது.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை "ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்" நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருவன், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, ராட்சசி, கைதி, சுல்தான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!