
பிக்பாஸ் சீசன் 5ல் புதிய மாற்றங்கள்
சில பல புதிய நிகழ்வுகளை வர உள்ள 5வது சீசனில் வைக்க வேண்டும் என கிரியேட்டிவ் குழுவினர் மூளையைப் போட்டு கசக்கி வருகிறார்களாம். நிகழ்ச்சி முந்தைய நான்கு சீசன்களை விட பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் தயாரிப்புக் குழு. எனவே, நிகழ்ச்சிக்கான பட்ஜெட்டையும் இந்த வருடம் இரு மடங்காக உயர்த்தி உள்ளார்களாம்.
கடந்த நான்காவது சீசனில் சினிமா பிரபலங்களை விட டிவி பிரபலங்கள் தான் அதிகமாக இருந்தது. எனவே, வர உள்ள ஐந்தாவது சீசனில் சினிமா பிரபலங்கள் சிலர் கண்டிப்பாக இடம் பெற்றாக வேண்டும் என சேனல் தரப்பிலிருந்தும் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளதாம்.
பிக்பாஸ் வீடு மட்டும் வழக்கம் போல புதுப் பொலிவுடன் இருந்தால் போதாது, நிகழ்ச்சிக்குள்ளும் புதுப் பொலிவு வேண்டும் என்பதுதான் இந்த வருட டார்கெட் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!