விடுமுறை நாட்களை குறி வைக்கும் கேஜிஎப் 2
ஜூலை 07, 2021
Advertisement
2018ல் வெளிவந்த கன்னடப் படமான "கேஜிஎப்" தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தை முதலில் ஜுலை 16ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை.
படத்தை எப்போது வெளியிடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். முதல் பாகம் வெளியானதைப் போலவே கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் சென்டிமென்ட்டாக முதல் பாகத்தை பெரிய அளவில் பேச வைத்தது போல இரண்டாம் பாகத்தையும் பேச வைக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கிறதாம்.
தற்போது சில மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் வழக்கம் போல வர இன்னும் சில வாரங்கள் ஆகும். எனவே, கிறிஸ்துமஸ் விடுமுறை என்பது பல விதங்களிலும படத்திற்கு பிளஸ் ஆக அமையும் என்பதும் ஒரு காரணம் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!