
விஜய்யின் 66, 67வது படங்கள் தெலுங்கு தயாரிப்பாளருக்கே...
விஜய் தற்போது "பீஸ்ட்" படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பின் தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் தன்னுடைய 66வது படத்தில் நடிக்கப் போகிறார். இதற்கடுத்து உருவாக உள்ள 67வது படத்தையும் தெலுங்குத் தயாரிப்பாளர் தான் தயாரிக்கப் போவதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் இது குறித்து விஜய்யிடம் பேசிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
விஜய் திடீரென தெலுங்குத் தயாரிப்பாளர்கள் பக்கம் தாவுவது குறித்து தமிழ்த் தயாரிப்பாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனராம். விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவர்தான் அவரை தெலுங்குப் பக்கம் அழைத்துப் போவதாகச் சொல்கிறார்கள்.
விஜய்யைப் போலவே நடிகர் தனுஷ், இயக்குனர் ஷங்கர் ஆகியோரது அடுத்த படங்களையும் தெலுங்கு தயாரிப்பாளர்களே தயாரிக்கப் போகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!