
ராஜூ முருகன் வெளியிடும் ஆல்பம் பாடலில் சஞ்சிதா ஷெட்டி
இதில் ராஜூ முருகனின் உதவியாளர் சஞ்சய் இயக்கி, நடிக்க அவருடன் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். கொஞ்சம் பேசு எனத் தொடங்கும் இந்த பாடலை யுகபாரதி எழுத ஏ.ஆர்.ரகுமானிடத்தில் இசை கற்ற நரேன் இசையமைத்துள்ளார். பிரதீப் குமார், நித்யஸ்ரீ பாடியுள்ளனர். சாண்டி நடனம் அமைக்க பகத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாடல் பற்றி சஞ்சய் கூறியதாவது : ஜிப்சி படத்துக்காக நாடு முழுக்க இருக்கும் தனியிசை பாடகர்களை சந்தித்தபோது எங்களுக்கு இந்த யோசனை தோன்றியது. நரேனை பார்த்ததும் பாடலாக உருவாக்க திட்டமிட்டோம். காதலர்கள், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சிறுசிறு விரிசல்களை பெரிய பிரிவாக மாறாமல் தவிர்ப்பது எப்படி? என்பதுடன் கொரோனா தொடர்பாக ஒரு முக்கிய விழிப்புணர்வு கருத்தும் பாடலில் உள்ளது".
இவ்வாறு அவர் கூறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!