
ஷங்கர் - ராம் சரண் முக்கிய பேச்சுவார்த்தை
படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகும் 50வது படமான இதை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். "ஆர்ஆர்ஆர்" படத்திற்குப் பிறகு ராம் சரண் நடிக்கும் படம் என்பதால் படத்திற்கான வியாபாரமும் பெரிதாகவே இருக்கும் என்பதே அதற்குக் காரணம்.
படத்தின் இசையமைப்பாளராக அனிருத் தான் இருப்பார் என முன்னர் தகவல் வந்தது. ஆனால், தற்போது தமன் இசையமைக்கவும் வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் இயக்கிய "பாய்ஸ்" படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர்தான் தமன். அதன்பிறகு நடிப்பை விட்டுவிட்டு முழு நேர இசையமைப்பாளராக மாறிவிட்டார். தற்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
விரைவில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!