
யாரை நம்புவது என்றே தெரியவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்
அதில் அவர் கூறியிருப்பதாவது : "ரசிகர்களிடம் பணத்தை பெற்று கொண்டு என்னைப்பற்றிய பர்சனல் விவரங்களை கூறுவது போன்ற செயல்களை என்னுடன் இருந்து கொண்டே, எனக்கு மிகவும் நம்பிக்கையான நபரே இதுமாதிரி செய்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது புகார் அளிக்க பலர் கூறினார்கள். என்றாலும் தப்பு நடந்து விட்டது. இனிமேல் நாம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று நான் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன். என்னை போல மற்றவர்களுக்கு எதுவும் இதுபோன்று நேரக்கூடாது என்பதற்காக இதனை நான் சொல்கிறேன். எனவே யாரை நம்புவது? யாரை நம்பக் கூடாது? என்றே எனக்கு புரியவில்லை" என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!