இரண்டாவது தெலுங்கு படத்திலும் கமிட்டான தனுஷ்
ஜூலை 04, 2021
Advertisement
தி கிரேமேன் படத்தை முடித்துவிட்ட தனுஷ் அடுத்தபடியாக கார்த்திக் நரேன் இயக்கும் தனது 43ஆவது படத்தில் ஐதராபாத்தில் முகாமிட்டு நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் தனுஷ். மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தநிலையில், மீண்டுமொரு தெலுங்கு படத்திலும் தனுஷ் நடிப்பதாக தற்போது இன்னொரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் அந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நாக வம்சி தயாரிக்கிறார். அவரும் தனுஷை ஐதராபாத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். அந்த படத்தை தெலுங்கில் தொலி பிரேமா, மிஸ்டர் மஜ்னு, ரங்தே போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறாராம். இது குறித்த தகவலை விரைவில் தனுஷ் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!