
முருகதாஸுக்குக்கு முன்னுரிமை கொடுக்கும் அல்லு அர்ஜுன்
தற்போது புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதை முடித்ததும் வக்கீல் சாப் படத்தை இயக்கிய வேணு ஸ்ரீராம் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் வேணு ஸ்ரீராம் படத்தில் நடிப்பது உண்மைதான் என்றாலும், தற்போது முருகதாஸ் படத்திற்கு தான் அல்லு அர்ஜூன் முன்னுரிமை கொடுக்க விரும்புகிறாராம். அதனால் புஷ்பா படப்பிடிப்பு முடிவடைந்ததும் முருகதாஸ் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டு அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம் அல்லு அர்ஜுன். அதற்கான தீவிரமான வேலைகளில் முருகதாஸ் தற்போதே இறங்கி விட்டாராம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!