
அமெரிக்காவில் ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது
அதன் பின்னர் ஆண்டு தோறும் அமெரிக்காவில் உள்ள மயோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்வார். அதன்படி இந்த ஆண்டு மருத்துவ பரிசோதனைக்காக கடந்த19ம் தேதி அமெரிக்கா சென்றார். ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், அவரோடு இணைந்து கொண்டார்.
நேற்று ரஜினிக்கு மயோ மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடந்தது. இந்த சோதனை முடிந்து ரஜினி வெளிவரும் காட்சிகள் இணைய தளத்தில் புகைப்படங்களாக பரவியது. ரஜினியின் உடல்நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கிறது. இன்னும் 3 வாரங்கள் வரை மருத்துவ கண்காணிப்பில் ஓய்வெடுத்து விட்டு அதன் பிறகு அவர் சென்னை திரும்புகிறார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!