
பெரிய படங்களை வாங்கிக் குவித்த தெலுங்கு டிவி
தெலுங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் டிவியான ஸ்டார் மா, தெலுங்கில் இந்த வருடமும் அடுத்த வருடமும் வெளிவர உள்ள சில புதிய படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்கிக் குவித்துள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அந்த டிவி நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் ராம் சரண் நடிக்கும் "ஆர்ஆர்ஆர்", மகேஷ் பாபு நடிக்கும் "சர்காரு வாரிபாட்டா", அல்லு அர்ஜுன் நடிக்கும் "புஷ்பா", பாலகிருஷ்ணா நடிக்கும் "அகாண்டா", ரவி தேஜா நடிக்கும் "கிலாடி", நானி நடிக்கும் "டக் ஜகதீஷ்", நிதின் நடிக்கும் "மேஸ்ட்ரோ" நாக சைதன்யா நடிக்கும்" லவ் ஸ்டோரி", அகில் நடிக்கும் "மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்", ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமைகளை பலத்த போட்டிக்கிடையில் வாங்கியுள்ளது.
இவ்வளவு பெரிய படங்களை அந்த டிவி வாங்கியுள்ளது திரையுலகத்தில் உள்ளவர்களுக்கும், மற்ற போட்டி டிவிக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம். விரைவில் வெளியாக உள்ள இப்படங்கள் ஸ்டார் மா டிவியில் ஒளிபரப்பாகும். இப்படங்கள் மூலம் தங்களது ரேட்டிங்கை அந்த டிவி மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!