
வழக்கை ரத்து செய்யக்கோரி மன்சூர் அலிகான் மனு
கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்தநிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!