
இயக்குனர் ஷங்கர் மகளுக்கு அடுத்த வாரம் திருமணம்
பிரபல பிஸினஸ்மேன் குடும்பத்தைச் சேர்ந்தவரின் மகனுக்கு தன் மகளை நிச்சயம் செய்துள்ளார் ஷங்கர். திருமணம் அடுத்த வாரம் பொள்ளாச்சியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்திருமணத்தில் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்களாம். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் திருமணத்தையும் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்.
தளர்வுகள் முழுவதுமாக வந்த பிறகு சென்னையில் அனைவருக்குமாக திருமண வரவேற்பு நடத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். தனது மகளின் திருமணம் குறித்த தகவலை ஷங்கர் விரைவில் அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!