
உண்மை கதையில் அதர்வா முரளியின் “அட்ரஸ்”
இதில் ஒரு புரட்சிகரமான "காளி" என்கிற கேரக்டரில் அதர்வா முரளி நட்புக்காக நடித்து கொடுத்துள்ளார். இவருக்கு ஒரு காதல் பாடல் காட்சியும், இரண்டு ஸ்டண்ட் காட்சியும், புரட்சிகரமான பல காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கேரக்டர் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெறும். இவரது ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை. இதனுடைய படப்பிடிப்பு, மலையும்.. மலை சார்ந்த பகுதிகளில் நடைபெற்றது. கொடைக்கானலில் இருந்து 8 கிலோமீட்டர் நடந்து நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இதன் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!