
முதல்வர் மகளாக நடிக்க நயன்தாரா சம்மதம்
தெலுங்கு உரிமையை நடிகர் சிரஞ்சீவி வாங்கி வைத்திருக்கிறார். "தனி ஒருவன்" படத்தை இயக்கிய மோகன்ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்டு படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்தின் பணிகளை மோகன்ராஜா செய்து வந்தார். தெலுங்குக்கு ஏற்றாற்போல் கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னார் சிரஞ்சீவி. அந்த மாற்றங்களை உடனடியாக செய்துக்கொடுத்தார் மோகன்ராஜா. இதற்கிடையே இந்த படத்திலிருந்து சமீபத்தில் விலகினார் மோகன்ராஜா என்ற தகவல் கசிந்தது. ஆனால் அந்த தகவலை சிரஞ்சீவி தரப்பு மறுத்தது.
இந்நிலையில் படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. "ஆச்சார்யா" படத்தின் பணிகளும் தற்போது முடியவுள்ளது. இதையடுத்து விரைவில் சிரஞ்சீவி இந்த படத்தில் இணையவுள்ளார். அதேநேரம் நயன்தாரா இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் முதலமைச்சர் மகள் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது தான் நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!