
விஜய்யின் பீஸ்ட் போஸ்டர் அதிக லைக்குகள் சாதனை
விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் மாலை படக்குழு வெளியிட்டது. அதில் விஜய்யின் பெயரிடாத இப்படத்திற்கு "பீஸ்ட்" என வித்தியாசமான பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அதன்படி போஸ்டர் வெளியாகி 24 மணி நேரத்தில் இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்றுள்ளது. இது மாஸ்டர் சாதனையை விட அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது. "மாஸ்டர்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகபட்சமாக 2 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகளை பெற்றது. ஆனால் பீஸ்ட் படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர், 2 லட்சத்து 78 ஆயிரம் லைக்குகளை பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.
அட்மினால் செயல்படும் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான போஸ்டர் லைக்ஸை வைத்து இந்த சாதனை புள்ளி விபரம் எடுக்கப்பட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!