
ஜகமே தந்திரம் தோல்வியை ஏற்றுக் கொண்டாரா தயாரிப்பாளர் ?
பல லாஜிக் ஓட்டைகளுடன் இரண்டே முக்கால் மணி நேரம் பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியாத படமாக இருந்தது என விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
ஓடிடி தளத்திற்கு படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் நல்ல விலைக்கு படத்தை விற்று அவர் தப்பித்துவிட்டார் என்றும், இப்படத்தின் தோல்வி கார்த்திக் சுப்பராஜ், தனுஷ் ஆகியோருக்குத் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
"இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, ஏலே, மண்டேலே" என பலராலும் பாராட்டப்பட்ட படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் "ஜகமே தந்திரம்" படத்தில் எப்படி தடுமாறினார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் படத்தின் தோல்வியை ஏற்றுக் கொண்டது போல, "ஜகமே தந்திரம்" படத்தில் தண்டவாளத்தில் ரயில் முன் தனுஷ் கார் நிற்கும் காட்சியின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “வெற்றி என்பது வெற்றி அல்ல, தோல்வி என்பது தோல்வி அல்ல,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!