
மாநாடு, விஜய் - ஒரே நாளில் இரண்டு ஸ்பேஸ் போட்டி உரையாடல்
ஏற்கெனவே, டுவிட்டரில் டிரெண்டிங் ஹேஷ்டேக், அதிகப் பதிவுகள், ரிடுவீட் என சினிமா ரசிகர்கள் பல சமயங்களில் போட்டி போட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த "ஸ்பேஸ்" சாதனை மூலமும் போட்டியும், சண்டைகளும் ஆரம்பமாகும் போலத் தெரிகிறது.
நேற்று "மாநாடு" படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டிற்காக ஒரு ஸ்பேஸ் உரையாடலும், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மற்றொரு ஸ்பேஸ் உரையாடலும் டுவிட்டர் தளத்தில் நடந்தது.
இதில் "மாநாடு" ஸ்பேஸ் உரையாடலுக்கு 12 ஆயிரத்திற்கும் குறைவான பங்கேற்பாளர்களே இருந்தனர். இது பதினைந்து நாட்களுக்கு முன்பு தனுஷ் பங்கேற்க நடந்த "ஜகமே தந்திரம்" ஸ்பேஸ் உரையாடலில் பங்கேற்ற 18 ஆயிரம் பங்கேற்பாளர்களை விடக் குறைவாகவே அமைந்தது. அதே சமயம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடந்த ஸ்பேஸ் உரையாடலில் 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இது தமிழ் சினிமா பற்றிய ஸ்பேஸ் உரையாடலில் புதிய சாதனை. அதேசமயம் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவு.
ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ள, இன்னும் புதிது புதிதாக எத்தனை கண்டுபிடிக்கப் போகிறார்களோ ?.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!