
விஜய்க்கு வாழ்த்து சொன்ன விஜய் 66 தயாரிப்பு நிறுவனம்
அதையடுத்து தன்னுடைய அடுத்த படத்தை அவர் தமிழ், தெலுங்கு என பான் - இந்தியா படமாக்க திட்டமிட்டுள்ளார். "பீஸ்ட்" படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள அவரது 66வது படத்தை தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நிறுவனமான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்தை மட்டும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தளபதி விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என அவர்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விஜய்யின் 66வது படம் அவர்கள் தான் தயாரிக்க உள்ளார்கள் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
கமல் வாழ்த்து
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்"" என பதிவிட்டுள்ளார்.
இவரைப்போன்று ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!