விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியான படம் 96. இந்த படத்தில் சின்ன வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். அதன்பிறகு இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சின்ன வயது சமந்தாவாக நடித்தார். பின்னர் மாஸ்டர், கர்ணன் படங்களில் நடித்தார். இந்நிலையில் தமிழில் வெற்றி - அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 8 தோட்டாக்கள் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர் நாயகியாக அறிமுகமாகிறார். தெலுங்கு நடிகர் சந்தோஷ் ஷோபன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தயாரிக்கிறார். தமிழில் இயக்கிய ஸ்ரீகணேசே தெலுங்கிலும் இயக்குகிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!