
ரூ.500 கோடி டீலை நிராகரித்த ராதே ஷ்யாம் தயாரிப்பாளர்
தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக பெரும்பாலும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்த படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விலை பேசி வருகின்றன. அப்படி ஒரு ஓடிடி நிறுவனம் 500 கோடி ரூபாய் கொடுத்து இந்த படத்தை கைப்பற்ற முயற்சித்தது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரோ அதை நிராகரித்து விட்டார்
இந்த படத்தை நேரடியாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது தான் தனது முடிவு என்றும் அதுவரை நாங்கள் பொறுமையாக காத்திருக்க தயார் என்றும் கூறிவிட்டாராம் படத்தின் தயாரிப்பாளர். இந்த படத்தின் பட்ஜெட் ஏற்கனவே திட்டமிட்டதை விட சற்று அதிகமாகி விட்டது என்றாலும்கூட,. ஓடிடி டீலிங்கை மறு யோசனைக்கு இடமின்றி நிராகரித்து உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!