
சாயம் : அபி சரவணன் நடிக்கும் அரசியல் படம்
ஒயிட் லேம்ப் புரொடக்சன் மற்றும் எஸ்.பி. ராமநாதன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்குகிறார். இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் பலர் நடித்துள்ளனர்.
நாகா உதயன் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. தற்போதைய நிலைமை சீராவதை பொறுத்து படம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!