
விஜய் 66 அப்டேட் கூட வருது, வலிமை அப்டேட் எப்போ வரும் ?
ஆனால், அஜித் நடித்து வரும் "வலிமை" அப்டேட்டை மட்டும் அப்படக்குழுவினர் தர மிகவும் தாமம் செய்து வருகிறார்கள் என்ற வருத்தம் அஜித் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பல இடங்களில் "வலிமை அப்டேட்" கேட்ட அஜித் ரசிகர்கள் தற்போது நடந்து வரும் இந்தியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கூட ஒரு பேனர் பிடித்து அப்டேட் கேட்டார்கள். திமுக., எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா கூட சமூகவலைதளத்தில் இதுக்கு மேல யாரும் பொறுமையா இருக்க முடியாது. வலிமை அப்டேட் எப்பதான் வரும் என கேட்டுள்ளார்.
அஜித் பிறந்தநாளன்று வெளியாக இருந்த அப்டேட்டை கொரானோ காலம் என்பதால் தள்ளி வைத்தார்கள். தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் இனியும் தாமதிக்காமல் கொடுப்பதுதான் படக்குழுவினருக்கு சிறப்பு.
"வலிமை அப்டேட்" வேண்டும் என ஏதாவது போராட்டம் ஆரம்பிப்பதற்குள் கொடுத்து விடுங்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!