
விஜய் பிறந்தநாள் : அரசியல் போஸ்டரால் சர்ச்சை
இந்நிலையில், விஜய் 65ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளுக்கு முந்தின நாளான ஜூன் 21-ந்தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் சோசியல் மீடியாவில் இப்போதே பரபரப்பை ஆரம்பித்து விட்ட விஜய் ரசிகர்கள், இதுவரை விஜய் நடித்துள்ள 64 படங்களின் போட்டோக்களை வைத்து ஒரு ஸ்பெசல் போஸ்டரை சோசியல் மீடியாவில் டிரண்டிங் செய்கின்றனர்.
இதுஒருபுறம் இருக்க விஜய்யின் அரசியல் என்டரி குறித்த இன்னொரு போஸ்டரையும் வெளியிட்டு மேலும் பரபரப்பு கூட்டி வருகின்றனர் ரசிகர்கள். திண்டுக்கல் முழுதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற புகைப்படமும், ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட, தம்பி வா; தலைமை ஏற்க வா என்று அழைக்கும் விதமான வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தி.மு.க.,வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!