
மீண்டும் மோகன்லாலை இயக்கும் பிருத்விராஜ் : மீனா ஜோடி சேருகிறார்
திரிஷ்யம் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், மலையாளத்தில் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற அரசியல் படத்தை இயக்கிய நடிகர் பிருத்விராஜ் அடுத்தபடியாக ப்ரோ டாடி என்றொரு படத்தை இயக்குகிறார். இந்தபடத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். காமெடி கதையில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், முரளிகோபி என பலர் நடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் பிருத்விராஜ்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!