
அரவிந்த்சாமியின் பிறந்தநாள் பரிசாக ரெண்டகம் போஸ்டர் வெளியீடு
மலையாளத்தில் ஓட்டு என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இதன்மூலம் அவரும் தமிழில் முதன்முதலாக அடியெடுத்து வைக்கிறார். ஈஷா ரெப்பா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை டி.பி.பெலினி என்பவர் இயக்கி வருகிறார்.
அரவிந்த்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ரெண்டகம் படக்குழுவினர் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். நடிகர் குஞ்சாக்கோ போபனும் “நீங்கள் தான் எனது வழிகாட்டி” என குறிப்பிட்டு அரவிந்தசாமியை வாழ்த்தியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!