
அந்நியன் ஹிந்தி ரீமேக் : உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்
அந்த அறிவிப்பு வெளியானதும் படத்தைத் தமிழில் தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் படத்தின் ஹிந்தி ரீமேக் கதை உரிமை தங்களிடமே இருப்பதாக தெரிவித்தது. அதற்கு ஷங்கரும் பதில் கொடுத்து கதையின் உரிமை தனக்குத்தான் சொந்தம் என்றார்.
அதன்பிறகு அந்த விவகாரம் குறித்து எந்த சர்ச்சையும் வெளியாகவில்லை. இதனிடையே, படத்தை ஹிந்தியில் தயாரிக்க உள்ள பென் இந்தியா நிறுவனம் அவர்களது அடுத்தடுத்த தயாரிப்புகளைப் பற்றிய மொத்த அறிவிப்பை இன்று(ஜூன் 17) வெளியிட்டது. அதில் "அந்நியன்" ஹிந்தி ரீமேக்கும் இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் அந்நிறுவனம் படத்தைத் தயாரிக்கப் போவது உறுதியாகியுள்ளது. கதை உரிமை விவகாரத்தில் என்ன மாதிரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது விரைவில் தெரிய வரும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!