
படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் பறந்த விக்கி - நயன்
சென்னைக்கும், கொச்சிக்கும் அடிக்கடி சென்று வரும் இந்த காதல் ஜோடி கொரோனா காலம் என்பதால் தனி விமானத்தில் பறக்க தொடங்கி உள்ளனர். ஏற்கனவே இதுபோன்று இரு முறை தனி விமானத்தில் இவர்கள் சென்று வந்த நிலையில் இப்போது மீண்டும் தனி விமானத்தில் சென்னையில் இருந்து கொச்சிக்கு பறந்துள்ளனர்.
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் பாட்டு என்ற படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் இவர் கொச்சினுக்கு தனது காதலன் விக்னேஷ் சிவனையும் அழைத்து சென்றுள்ளார். தனி விமானத்தில் இவர் வந்திறக்கும் போடக்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!