
26வது ஆண்டில் ரஜினிகாந்த் நடித்த பெத்தராயுடு
இப்படத்தை தெலுங்கில் "பெத்த ராயுடு" என்ற பெயரில் ரீமேக் செய்து 1995ம் ஆண்டு வெளியிட்டு அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றார்கள். தெலுங்கு ரீமேக்கை ரவி ராஜா பினி செட்டி இயக்க, மோகன் பாபு, சௌந்தர்யா, பானுப்ரியா ஆகியோருடன் ரஜினிகாந்தும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
தமிழில் விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தைத்தான் தெலுங்கில் ஏற்று நடித்தார் ரஜினிகாந்த். மோகன் பாபுவும், ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள், மோகன் பாபு கேட்டுக் கொண்டதால் அவருக்காக அக்கதாபாத்திரத்தில் நடித்தார் ரஜினி. ரஜினியின் நடிப்பும், அவரது கதாபாத்திரமும் தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அப்படம் வெளிவந்து இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. படத்தை இயக்கிய ரவி ராஜா பினிசெட்டியின் மகன் நடிகர் ஆதி, அப்படம் பற்றி நினைவுகூர்ந்து, “ஆல் டைம் பிளாக் பஸ்டர் "பெத்தராயுடு" படத்தின் 26வது வருடக் கொண்டாட்டம். எனது அப்பா இயக்கிய படங்களில் எனக்குப் பிடித்த ஒன்று, தனித்துவமான மோகன்பாபு சார், சிறப்புத் தோற்றத்தில் தலைவர் ரஜினிகாந்த் ஆகியோருடன்....இதன் மகத்துவம் மீள முடியாத ஒன்று...,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!