
விஜய் முடிவில் திடீர் மாற்றம் ?
பொதுவாக விஜய் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் போதுதான் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். ஆனால், விஜய் அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஒரு பேட்டி ஒன்றிலும் வம்சி அது பற்றிய தகவலை உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த அணுகுமுறை விஜய்க்குப் பிடிக்காதே என அப்போதே கோலிவுட்டில் கிசுகிசுத்துக் கொண்டார்கள். அதற்கேற்றபடி சில காரணங்களைச் சொல்லி அப்படத்தில் நடிப்பதைத் தவிர்த்து விடலாமா என விஜய் யோசிப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இங்கேயே அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கும் போது, தெலுங்குத் தயாரிப்பாளரின் படத்தில் ஏன் நடிக்க வேண்டும் என்ற சலசலப்பும் இங்கு எழுந்துள்ளது.
எனவே, தெலுங்கு தயாரிப்பாளரின் தயாரிப்பில், தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் விஜய் நடிப்பது மறுபரிசீலனை செய்யப்படும் என்றே தெரிகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!