
சினிமாவில் ஜெயிக்க எது முக்கியம்? - வாணி போஜன் பதில்
அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாணி போஜனிடத்தில், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வர என்ன காரணம்? என்று ஒரு ரசிகர் கேட்டபோது, சின்னத்திரையில் எத்தனை சீரியல்களில் நடித்தாலும் கிட்டத்தட்ட ஒரே சாயல் கொண்ட கேரக்டர்களாகத்தான் கிடைக்கும். ஆனால் சினிமாவில் மாறுபட்ட கதைகளில் தயாராவதால் மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க முடியும். அதனால் தான் நான் சினிமாவுக்கு வந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் வெற்றி பெறுவதற்கு கவர்ச்சி, திறமை இரண்டில் எது முக்கியம்? என்று இன்னொரு ரசிகர் கேட்டதற்கு, கவர்ச்சியும் தேவை தான். என்றாலும் திறமை இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று பதில் கொடுத்துள்ளார் வாணி போஜன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!