
இந்திய அளவில் மாஸ்டர் முதலிடம், கர்ணன் 6வது இடம்
அதையடுத்து சில வெப் சீரிஸ்கள் இரண்டாம், மூன்றாம் இடங்களை கைப்பற்ற, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா நடித்த திரிஷ்யம்-2 ஓடிடி தளத்தில் வெளியாகி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்து தமன்னா நடித்த நவம்பர் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸ் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.அதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் தியேட்டரில் 50 சதவிகித இருக்கைகளுடன் நல்ல வசூலை கொடுத்ததோடு,ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்று 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அதன்பிறகு பவன்கல்யாண் நடித்து வெளியான வக்கீல் சாப் படம் 7ஆவது இடத்தை பிடித்துள்ளது. அந்தவகையில் ஐஎம்டிபி வெளியிட்டுள்ள இந்த டாப் 10 பட்டியலில் திரைப்படங்களுக்கு இணையாக பல வெப்சீரிஸ்களும் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு கவனத்தை ஈர்த்துள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!