
ஹிந்தியில் அடுத்தடுத்து ரீமேக்காகும் லோகேஷ் கனகராஜ் படங்கள்
இவரது இயக்கத்தில் வெளிவந்த மூன்று படங்களுமே அடுத்தடுத்து ஹிந்தியில் ரீமேக் ஆவது நிச்சயம் பெருமையான ஒன்றுதான். "மாநகரம்" படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி நடித்து வருகிறார்கள். "கைதி" படத்தின் ரீமேக்கில் அஜய் தேவகன் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தின் மற்ற தேர்வுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. "மாஸ்டர்" படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக உள்ளது.
மேலே குறிப்பிட்ட மூன்று படங்களும் அடுத்த ஆண்டில் அடுத்தடுத்து ஹிந்தியில் வெளிவரும் வாய்ப்புகள் நிறையவே உண்டு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!