
மாஸ்டர் ஹிந்தி ரீமேக் : சல்மான் விரைவில் அறிவிப்பு
அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சல்மான் விரைவில் வெளியிடுவார் என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தைப் பார்த்த சல்மான் தனக்குப் பொருத்தமான கதையாகவும், கதாபாத்திரமாகவும் இருக்குமென உற்சாகமடைந்ததாகச் சொல்கிறார்கள்.
இம்மாதிரியான ஹீரோயிசக் கதைகள் சல்மானுக்கு எப்பவுமே ரொம்பவும் பிடிக்கும். அவரை அப்படிப்பட்ட கதைகளில் தான் அவருடைய ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். இயக்குனர், மற்ற நடிகர்கள், நடிகைகள் யார் என்பது குறித்தும் விரைவில் முடிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு அறிவிப்பு வரலாம்.
"மாஸ்டர்" படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டாலும் வெற்றி பெறவில்லை. மாறாக சல்மான் கான் நடிக்க ரீமேக் செய்தால் தமிழைப் போலவே பாக்ஸ் ஆபீஸ் வசூலை அள்ளும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!