
ஐதராபாத்தில் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு நடைபெறுமா ?
தமிழகத்தில் இன்னும் சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அடுத்த வாரம் முதல் அனுமதி அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருந்தாலும் பெரும்பாலான தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெறதுவதை விட ஐதராபாத்தில் தான் நடக்கிறது. எனவே, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் ஐதராபாத்தில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காகவே முன்னேற்பாடாக பல இளம் நடிகர்கள், நடிகைகள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு வருகிறார்களாம். படப்பிடிப்புகள் ஆரம்பமானாலும் தியேட்டர்களுக்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஆகும் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!