சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நடித்து 2019ல் வெளியாகி, பாராட்டை பெற்ற படம் ‛மகாமுனி". இப்படம் ஏற்கனவே சில பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றது. இப்போதும் விருதுகளை வென்று வருகிறது. இதுப்பற்றி படக்குழு கூறுகையில், ‛‛மகாமுனி படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2 விருதுகள் உறுதியாகி உள்ளன. மேலும் இரண்டு விருதுக்கான போட்டிக்கு தேர்வாகி உள்ளது"" என தெரிவித்துள்ளனர். இப்படம் மேலும் பல விருதுகளை வென்று வருவது ஆர்யா உள்ளிட்ட படக்குழுவை மகழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!