
பாபநாசம் 2 : கமல்ஹாசனைத் துரத்தும் அடுத்த இரண்டாம் பாகம்
சில தினங்களுக்கு முன்பு "பஞ்சதந்திரம் 2" படம் பற்றி அதில் ஒரு கதாநாயகனாக நடித்த ஸ்ரீமன் ஒரு பதிவிட்டு பரபரப்பூட்டினார். அதோடு, கமல்ஹாசன் அவர் நடித்த சில முந்தைய படங்களின் இரண்டாம் பாகப் படங்களை உருவாக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பப்பட்டார்கள். அவற்றில் "தேவர் மகன் 2, வேட்டையாடு விளையாடு 2," என சில படங்களும் அடக்கம். அவையெல்லாம் நடக்குமா என்பதும் தெரியாது.
இப்போது கமல்ஹாசன் "பாபநாசம் 2" படத்தை ஆரம்பிப்பாரா, மாட்டாரா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த "த்ரிஷ்யம்" படம் தமிழில் ரீமேக்காகி "பாபநாசம்" ஆக வெளிவந்தது. "த்ரிஷ்யம் 2" கடந்த பிப்ரவரியில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து அதை தெலுங்கிலும் ரீமேக் செய்து இயக்கி முடித்துவிட்டார் ஜீத்து ஜோசப்.
மலையாளம், தெலுங்கைப் போலவே தமிழிலும் "பாபநாசம் 2" படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாராம் ஜீத்து. ஆனால், முதல் பாகத்தில் ஜோடியாக நடித்த கௌதமிக்குப் பதிலாக இரண்டாம் பாகத்தில் மீனா அல்லது வேறொருவரை நடிக்க வைக்க வேண்டும் என்று கமல் விரும்புகிறாராம்.
தற்போது "இந்தியன் 2, விக்ரம்" ஆகிய படங்கள் கைவசம் உள்ள நிலையில் "பாபநாசம் 2" எப்படி டேக்-ஆப் ஆகும் என்பது கமல் கையில்தான் உள்ளது என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!