
டபுள் ஆக்ஷனில் வரலட்சுமி வெளியிட்ட தடுப்பூசி விழிப்புணர்வு வீடியோ
அதையடுத்து தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து வீடியோ ஒன்றை அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இரண்டு பேர் உரையாடுவது போன்று அமைந்துள்ள அந்த வீடியோவில் வரலட்சுமியே டபுள் ஆக்சன் கொடுத்துள்ளார். அதில், ‛‛கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பாதிக்கப்படுகிறார்களாமே. அதோடு, பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் சொல்கிறார்களே? என்று ஒரு வரலட்சுமி கேட்கிறார். அதற்கு இன்னொரு வரலட்சுமி, ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டினால் விபத்து ஏற்படாது என்பதல்ல. ஆனால் விபத்து ஏற்பட்டாலும் உயிர்பிழைத்து விடுவார்கள். அதேபோல் தடுப்பூசி போட்டு கொரோனாவினால் பாதிக்கப்பட்டாலும் உயிர்பாதிப்பு ஏற்படாமல் அதை குணப்படுத்தி விட முடியும் என்கிறார். அதைக் கேட்டு தெளிவுபெறும் இன்னொரு வரலட்சுமி அப்படியென்றால் நாளைக்கே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறேன்"" என்று அவரிடத்தில் தெரிவிக்கிறார். இப்படியொரு கொரோனா விழிப்புணர்வு வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!