
ஷங்கர், லிங்குசாமி வழியில் ஏஆர்.முருகதாஸ்
விஜய்யின் 65வது படத்தை இயக்கும் வாய்ப்பை சில பிரச்சினைகளால் வேண்டாமென விலகிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனியிடம் பேசி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஆர். முருகதாஸ் இதற்கு முன் தெலுங்கு நடிரான மகேஷ்பாபுவுடன் இணைந்த "ஸ்பைடர்" பெரும் தோல்விப் படமாக அமைந்தது. இருந்தாலும் அடுத்து அவர் தமிழில் இயக்கிய "சர்க்கார்" பெரும் வெற்றிப் படமாகவும், "தர்பார்" சுமார் படமாகவும் அமைந்தது.
ஷங்கர், லிங்குசாமி ஆகியோரது படங்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும். அவர்கள் வழியில் ஏஆர் முருகதாஸுக்கும் மீண்டும் தெலுங்கு நடிகர் கிடைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!