
ராதே ஷ்யாம் ஓடிடி ரிலீஸ் என்பது உண்மையா?
பிரபாஸின் அடுத்த வெளியீடாக இந்தப் படம் தான் வர உள்ளது. ஆனால், இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றை படக்குழுவினர் மறுத்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ராதேஷ்யாம்" படத்தைத் தியேட்டர்களில் பார்க்கும் போதுதான் அதன் விஷுவல் பிரம்மாண்டத்தை ரசிக்க முடியும். நிலைமை சரியாகும் வரை காத்திருந்து அதன் பின் படத்தைத் தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்களாம்.
இருப்பினும் பல ஓடிடி நிறுவனங்களை பெரிய தொகை தருகிறோம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆசை காட்டி வருவதாகச் சொல்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!