
இந்தியா திரும்பிய ஸ்ரேயா
ஆனால், வடிவேலு கதாநாயகனாக நடித்த "இந்திரலோகத்தில் நா அழகப்பன்" படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி தன்னுடைய இமேஜை அவராகவே கீழிறக்கிக் கொண்டார். அதன்பின் நான்கைந்து படங்களில் அவர் கதாநாயகியாக நடித்தாலும் ஒரு படம் கூட ஓடவில்லை. அனைத்துமே தோல்விப் படங்களாக அமைந்தது.
2018ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி கோஸ்சேவ் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. அதன்பின் ஸ்பெயின் நாட்டில் கணவருடன் வசித்து வந்தார். இடையில் சில தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து தற்போது இந்தியாவிற்குத் திரும்பிவிட்டாராம் ஸ்ரேயா. தமிழ், தெலுங்கில் புதிய படங்களில் நடிக்க கவனம் செலுத்தப் போவதாக முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள். அதனால், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தான் இன்னமும் கதாநாயகியாக நடிக்கத் தயார் என தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழில் அவர் நடித்துள்ள "நரகாசூரன்" படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!