
இந்தியன் 2 பஞ்சாயத்து : ஒதுங்கிவிட்ட கமல்ஹாசன் ?
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கமல்ஹாசனும் இந்த விவகாரத்தில் லைகா மற்றும் ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக இம்மாதத் துவக்கத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவருடைய பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடியவில்லை என்கிறார்கள். இதனால், நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கலாம் என முடிவெடுத்துவிட்டாராம்.
இயக்குனர் ஷங்கரை நீதிமன்றம் இப்படத்தை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் உடனடியாக கமல்ஹாசனும் படத்தில் நடித்து முடிக்கத் தேதிகளைக் கொடுப்பாராம். இல்லையெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் தயாரித்து நடிக்கும் "விக்ரம்" படத்தில் நடிக்கப் போய்விடுவார் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!