
கொரோனா நேரத்தில் தினமும்18 மணி நேரம் நடித்த ராஷி கண்ணா
ராஷி கண்ணா கூறுகையில், ‛‛கொரோனா வைரஸ் மீண்டும் பரவிக் கொண்டிருந்த நேரம் தான் தேங்க்யூ படப்பிடிப்பிற்காக இத்தாலிக்கு புறப்பட்டு சென்றோம். முதலில் இத்தாலிக்கு செல்லவே பயந்தேன். என்றாலும் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் செட்டில் இருக்கும்போது இத்தாலி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதை பின்பற்றி படப்பிடிப்பு நடந்தது. சீக்கிரம் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை நடித்தோம். அப்படி நடித்து முடித்து விட்டு இந்தியா திரும்பியிருக்கிறோம்"" என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!