
தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் : சினிமா பிரபலங்கள் வேண்டுகோள்
திரையுலகில் தினமும் ஒருவராவது கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்து வருவது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இன்று மரணமடைந்த நடிகர் வெங்கட் சுபா தடுப்பூசி போட்டுக் கொள்ள பெரிதும் தயக்கம் காட்டி உள்ளார். அது பற்றி அவரது 30 ஆண்டு கால நண்பரும், தயாரிப்பாளருமான டி.சிவா கவலையுடன் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சத்யராஜ் கூட இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மக்கள் அனைவரும் அவரவர் டாக்டரை அணுகி ஆலோசனை பெற்று தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும், நான் சொல்கிறேன் என்று கூட போட்டுக் கொள்ள வேண்டாம், டாக்டர்களை ஆலோசித்து போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி போடுவதன் மூலம் தொற்றிலிருந்து நிச்சயம் காப்பாற்றிக் கொள்ள முடியும் என பல டாக்டர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!