
சிம்புவின் முதல் 100 மில்லியன் பாடல்
சிம்பு நடித்த படங்களின் பாடல்களில் பல சூப்பர் ஹிட்டாக அமைந்திருந்தாலும் அவை எதுவுமே 100 மில்லியன் கிளப்பில் இணைந்ததில்லை. முதல் முறையாக "ஈஸ்வரன்" படத்தில் இடம் பெற்ற "மாங்கல்யம்" பாடல் தற்போது அந்த கிளப்பில் இணைந்துள்ளது.
தமன் இசையமைப்பில், யுகபாரதி எழுதி, சிலம்பரசன், ரோஷினி, தமன் ஆகியோர் பாடியுள்ள பாடல் இது. தெலுங்கில் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தமன் இசையமைத்துள்ள தமிழ்ப் பாடல் ஒன்று அந்த கிளப்பில் இணைவதும் இதுதான் முதல் முறை.
இந்த "மாங்கல்யம்" வீடியோ பாடல் கடந்த ஜனவரி மாதம் தான் யு டியூபில் வெளியானது. ஐந்து மாதங்களுக்குள் 100 மில்லியன் பார்வைகளை சாதனையை நிகழ்த்தியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!