
விஜய் ஆண்டனியை யார் எனக் கேட்ட இசைக்கலைஞர்
இப்படத்திற்கான பின்னணி இசையமைக்கும் வேலைகளை இப்படத்தின் இயக்குனர் நவீன், இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் ஆகியோர் ஜும் மீட்டிங் மூலம் இறுதி செய்து வருகிறார்களாம்.
“இன்று ஜும் வழியாக "அக்னி சிறகுகள்" படத்தின் பின்னணி இசையை இறுதி செய்து கொண்டிருந்தோம், நானும் கீ போர்டு புரோகிராமர் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன், . முதல் ரீலில் தாடியுடன் இருக்கும் விஜய் ஆண்டனியை அடையாளம் தெரியாமல் ஹீரோ யாரு சார் என்று புரோகிராமர் கேட்டார்,” என நவீன் டுவீட் செய்துள்ளார்.
அதற்கு விஜய் ஆண்டனி, “இயக்குனர் நவீன் அவருடைய கதை சொல்லல் மூலம் என்னை இம்ப்ரஸ் செய்துவிட்டார். முதல் நாளிலிருந்தே அவ்வளவு தெளிவு. மற்ற நடிகர்களைப் போலவே நானும் எனது படத்திற்கான வெளிச்சத்தைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன். வலிமையான கரு. இந்த சோதனைக் காலத்தில் "அக்னி சிறகுகள்" நிச்சயம் நிற்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!