
ஓய்வை அறிவித்த நடிகர் சந்திரமோகன்
1966ம் ஆண்டு வெளிவந்த "ரங்குல ராட்டினா" படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரமோகன். அதன்பின் கடந்த 55 வருடங்களாக எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.
தென்னிந்திய மொழிகளில் இதுவரையிலும் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1975ல் வெளிவந்த "நாளை நமதே" படத்தில் எம்ஜிஆர் தம்பியாக நடித்தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களிலும் நடித்தவர் பின்னர் தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார்.
கடைசியாக 2017ல் வெளிவந்த "ஆக்சிஜன்" படத்தில் நடித்தார். நாயகன், நகைச்சுவை, குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் பல நடிகர்கள், நடிகைகளுடன் நடித்திருக்கிறார். தெலுங்குத் திரையுலகத்தில் பல முக்கியமான படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்தின் உறவினர் தான் சந்திரமோகன். இனி, வீட்டில் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!